Saturday, April 13, 2013


இந்தியாவில் தயிர் சாதம் மிகவும் பிரபலமானது. அதிலும் தென்னிந்தியாவில் மதிய வேளையில் தயிர் சாதம் நிச்சயம் இருக்கும். இந்த தயிர் சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். குறிப்பாக கோடையில் தயிர் சாதம் அதிகம் சாப்பிட்டால், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.
மேலும் தயிர் செரிமானத்தை அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையை நீக்கும். தயிர் சாதத்தை பலவாறு செய்யலாம். அவற்றில் ஒரு வகை தான், மாதுளையை வைத்து செய்யக்கூடிய மாதுளை தயிர் சாதம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது இந்த மாதுளை தயிர் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
தயிர் - 1 கப்
பால் - 1 1/2 கப்
மாதுளை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி நன்கு கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியையும் போட்டு, தீயை குறைவில் வைத்து, சாதம் போன்று நன்கு வேக வைக்க வேண்டும்.

பின்பு அதனை இறக்கி லேசாக குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதில் தயிர், உப்பு, மாதுளை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான மாதுளை தயிர் சாதம் ரெடி!!!

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below