கொலிவுட்டின் சின்ன குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டு வந்த கொழு கொழு நாயகி ஹன்சிகாவை கடுப்பேற்றி உள்ளாராம் காஜல் அகர்வால்.
அமலாபால், சமந்தா போன்ற நாயகிகள் ஆந்திராவில் செட்டிலாகி விட, தனக்கு போட்டி எதுவும் இல்லை என சுற்றி திரிந்தார் ஹன்சிகா.
ஆனால் தற்போது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளாராம் காஜல் அகர்வால்.
ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா போன்ற படங்களில் நடித்து வரும், காஜல் மும்பையில் முகாமிட்ட படியே கொலிவுட் கதவுகளை பலமாக தட்டிக் கொண்டிருக்கிறார்.
மேலும் சில தமிழ் படங்களின் கதாநாயகி வாய்ப்பும் கிடைத்துள்ளதாம்.இதனால் இதுவரை கொலிவுட்டில் தனி ராஜாங்கம் நடத்தி வந்த ஹன்சிகா பயங்கர கடுப்பில் இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment