சென்னை: மர்மமான முறையில் காணாமல் போன நடிகை அஞ்சலி பெங்களூரில் தங்கியிருப்பதாக அவரது செல்போன் அழைப்பின் மூலம் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள். அவருடன் தங்கியிருப்பது யார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மார்ச் 31ம் தேதி ஹைதராபாத்துக்கு தனது சித்தப்பா சூரி பாபுவுடன் படப்பிடிப்புக்காகப் போனார் அஞ்சலி. அதன் பிறகு அவர் காணாமல் போனார். அவரைக் கடத்தி விட்டதாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அவரே யாருடனோ வெளியேறி விட்டதாக செய்திகள் வந்தன. இளம் நடிகர் ஒருவருடன் அவர் போயிருப்பதாகவும் செய்திகள் கூறின.
இந்த நிலையில் அஞ்சலியின் இருப்பிடம் குறித்து சரிவரத் தெரியால் பரபரப்பு காணப்படுகிறது. தற்போது அஞ்சலி இருக்கும் இடம் குறித்து தெரிய வந்துள்ளதாக தெரிகிறது.
நேற்று தனது அண்ணன் ரவி சங்கரை தொடர்பு கொண்டு பேசிய நடிகை அஞ்சலி, சில தயாரிப்பாளர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, நான் குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். அதனால்தான் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை. உங்களுக்கு சிரமம் கொடுத்ததற்காக வருந்துகிறேன். இன்னும் 2 நாட்களில் நான் வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று அவர் கூறியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இந்த தொலைபேசி அழைப்புகள் எங்கிருந்து வந்தன என்று போலீஸார் விசாரித்தபோது அவை பெங்களூரிலிருந்து வந்ததாக தெரிய வந்ததாம். எனவே அஞ்சலி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் தனது அண்ணனிடம் அஞ்சலி பேசுகையில், தன்னுடன் ஒருவர் இருப்பதாகவும், எனவே பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அஞ்சலியுடன் தங்கியிருக்கும் அந்த நபர் யார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடிகரா, அப்படியானால் தெலுங்கு நடிகரா, தமிழ் நாட்டு நடிகரா அல்லது வேறு யாரேனுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தெலுங்கு இளம் நடிகர்கள் யாரேனும் 'காணாமல்' போயுள்ளனரா என்பது குறித்தும் ஹைதராபாத் போலீஸார் விசாரித்து வருகின்றனராம்.
0 comments:
Post a Comment