திருநங்கைகளின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘நர்த்தகி’ என்ற படத்தை எடுத்த பெண் இயக்குநர் விஜயபத்மாவுக்கும், சினிமா பைனான்சியர் ஒருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த பைனான்சியர் பெயர் அசோக் லோதா. நிறைய படங்களுக்கு வட்டிக்கு பணம் தந்துள்ளார். இயக்குநர் விஜய பத்மாவுக்கு சினிமா எடுக்க ரூ 35 லட்சம் கடன் கொடுத்ததாகவும் அதை திருப்பித் தருவதாகக் கூறி, பின் ஏமாற்றியதாகவும் தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் அசோக் லோதா புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால் விஜயபத்மாவோ, அசோக் லோதா தன்னை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கொடுத்திருந்தார். இந்த புகார்களை விசாரித்த போது, அசோக் லோதாவுக்கு தான் கொடுக்க வேண்டியது ரூ 10 மட்டும்தான் என்றும், அதை மட்டுமே தரமுடியும் என்றும் கூறினார் அதே நேரம், போலீசார் அசோக் லோதாவிடம் பணம் வாங்கிக் கொண்டதால், தான் கொடுத்த புகாரை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் விஜயபத்மா.
போலீசாரோ, அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, பாலியல் புகார் குறித்தும் விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment