Saturday, April 13, 2013


கொலிவுட்டில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ள ஹன்சிகா, சமீபத்தில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை சந்தித்துள்ளார்.

பொதுவாக சினிமா நடிகைகள் மீது ரசிகர்களுக்கு மோகம் என்றால், நடிகைகளுக்கெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் மீது மோகமாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் லட்சுமிராய் தோனிக்கு நெருக்கமானவர் என்பது உலகறிந்த விடயம். இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கெவின் பீட்டர்சனின் தீவிர ரசிகையாக இருக்கிறார் ஹன்சிகா.

அவர் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் என்றால், ரிவி முன்பு அமர்ந்து அவர் அடிக்கும் ஒவ்வொரு பேட்டுக்கும் சதா கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டேயிருப்பாராம்.

அப்படிப்பட்ட ஹன்சிகா, சமீபத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்காக ஜப்பான் சென்ற போது எதிர்பாராத விதமாக அங்குள்ள விமான நிலையத்தில் கெவினை பார்த்தாராம்.
அவரைப் பார்த்த ஆனந்தத்தில் கையிலிருந்து பொருட்களையெல்லாம் அப்படியே கீழே போட்டு விட்டு, ஓடிச்சென்று கெவினை கட்டித் தழுவிக் கொண்டாராம்.

அதையடுத்து, அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஹன்சிகா, சில நிமிடங்கள் அவரைப் பற்றியும் அவரது விளையாட்டுகளைப் பற்றியும் பேசிவிட்டு விடை பெற்றாராம்.

அது மட்டுமின்றி அந்த பொன்னான நேரத்தில் கெவினுடன் நின்று விதவிதமான புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார் ஹன்சிகா.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below