Monday, April 29, 2013

நடிகை ஹன்சிகா நடித்து பணம் சம்பாதிப்பதோடு நின்று விடாமல் சில சமூக சேவைகளையும் சத்தமில்லாமல் செய்து வருகிறார். ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து கல்விக்கு உதவி செய்யும் ஹன்சிகா தற்போது மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்களின் சிகிச்சைக்காக உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷன் என்ற அமைப்பு பெண்கள் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னை டேர்ன்ஸ் பிங்க் என்ற இயக்கத்தை துவங்கியுள்ளது. இதன் தூதுவராக ஹன்சிகா மெத்வானி நியமிக்கப்பட்டுள்ளார்.

22 குழந்தைகளுக்கு கல்வி

நடிகை ஹன்சிகா மெத்வானி அவ்வப்போது மெய்யாலுமே சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் இதுவரை 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறார்.

முதியோர் இல்லம்

கொல்கத்தாவில் ஒரு முதியோர் இல்லம் நடத்துகிறார். ஹன்சிகாவின் இந்த சேவை மனப்பான்மை அவரது ரசிகர்களை பெரிதும் கவர்கிறது.

மார்பகப் புற்றுநோய்

இந்நிலையில் தற்போது சென்னை டேர்ன்ஸ் பிங்க் என்ற இயக்கத்தின் தூதுவராக ஹன்சிகா மெத்வானி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிமுக விழாவில் பங்கேற்று பேசும் போது “30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய் சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்கிறேன்” என்று ஹன்சிகா அறிவித்தார்.

மார்பக புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு பெண்ணுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் செலவாகும். 30 பெண்களுக்கும் ஹன்சிகா ரூ.1 கோடி வரை மருத்துவ செலவுகளை ஏற்க உள்ளார்.
ஹன்சிகா மூலம் சிகிச்சை பெறப்போகும் நோயாளிகளை சென்னை டேர்ன்ஸ் பிங்க் இயக்கத்தினர் தேர்வு செய்வார்கள். 

“மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்னை கவர்ந்தன. விழிப்புணர்வு மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன் என்று ஹன்சிகா கூறியுள்ளார். அழகுப் பெண் ஹன்சிகாவின் மனதும் அழகானதுதான் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் ஹன்சிகா.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below