கோவில்: சங்கரன் கோவில் அருகே மூன்று வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகன் செல்வம். இவன் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் செல்வம் மடடும் வீட்டில் தனியாக இருந்தான்.
அவனது பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது சிறுமியை என்னுடன் விளையாட வா என வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
விளையாடிக் கொண்டிருந்த மகளைக் காணாமல் சிறுமியியின் பெற்றோர் தேடியபோது, செல்வத்தின் வீட்டிலிருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை செல்வம் பலத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செல்வத்தை பிடித்து ஊததுமலை போலீசார் ஓப்படைத்தனர்.
போலீசார் கைது செய்து விசாரணைக்குப் பின்னர், பாளை சிறுவர் கூர்நோக்கி இல்லத்தில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
0 comments:
Post a Comment