கொமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துருவியாவிற்கு சொந்தமான 2 மருத்துவமனை சென்னையில் உள்ளது.இதில் டொக்டர்கள் உட்பட 24 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இது பற்றி நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. நேற்று 24 பேரும் திருமங்கலம் உதவி ஆணையாளர் கலிதீர்த்தனிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், எங்களுக்கு 3 மாதமாக மருத்துவமனை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் கஷ்டத்தில் உள்ளோம்.
சம்பளம் பற்றி கேட்டும் மருத்துவமனை உரிமையாளர்கள் "பவர்ஸ்டார்" சீனிவாசன், அவரது மனைவி துருவியா ஆகியோர் உரிய பதில் அளிக்கவில்லை.
எனவே எங்களது சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், புகாரின் அடிப்படையில் "பவர் ஸ்டார்" சீனிவாசன், அவரது மனைவி துருவியாவிடம் விசாரிப்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டோம் என்றும் அவர்களிடம் பேச முடியவில்லை. இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினர்.
0 comments:
Post a Comment