புதுடெல்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்துக்கு தகுந்தபடி, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்கின்றன.
கடந்த 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 பைசா குறைக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரிகள் சேர்த்து லிட்டருக்கு ரூ.1.26 குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.08 ஆகியுள்ளது.இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
டீசல் விலை கட்டுப் பாடு நீக்கப்பட்டிருந்தாலும், இழப்பை சரிகட்டும் வரை டீசல் விலையை மாதத்துக்கு 40 பைசா முதல் 50 பைசா வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், தற் போது டீசல் விலையில் எந்த மாற்றமும்
செய்யப் பட வில்லை.
0 comments:
Post a Comment